கரூர் மாவட்டத்தில் டிச.13 முதல் 22-ம் தேதி வரை - மாற்றுத் திறனாளிகளுக்கு அலிம்கோ உபகரணங்கள் வழங்க மதிப்பீடு முகாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல்

கரூர் மாவட்டத்தில் டிச.13 முதல் 22-ம் தேதி வரை -  மாற்றுத் திறனாளிகளுக்கு அலிம்கோ உபகரணங்கள் வழங்க மதிப்பீடு முகாம் :   மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல்
Updated on
1 min read

கரூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அலிம்கோ உபகரணங்கள் வழங்க வரும் 13-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை மதிப்பீடு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: கரூர் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில், கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி மற்றும் அந்தந்தப் பகுதி எம்எல்ஏக்கள் முன்னிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அலிம்கோ நிறுவனம் மூலம் உபகரணங்கள் வழங்க மதிப்பீடு செய்யும் முகாம் வரும் 13-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, வரும் 13-ம் தேதி கரூர் கோட்டாட்சியர் அலுவலகம், 14-ல் நொய்யல் ஈ.வெ.ரா.பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, 15-ல் அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம், 16-ல் சின்னதாராபுரம் வீரகுமார் திருமண மண்டபம், 20-ல் தரகம்பட்டி வட்டாட்சியர் அலுவலகம், 21-ல் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, 22-ல் வெள்ளியணை லட்சுமி மஹால் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in