வீரமலைப்பாளையத்தில் - நாளை முதல் டிச.14 வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சி :

வீரமலைப்பாளையத்தில்  -  நாளை முதல் டிச.14 வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சி :
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், வீரமலைப்பாளையத்தில் நாளை (டிச.9) முதல் டிச.14-ம் தேதி வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் அணியாப்பூர் கிராமம் வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு டிச.9-ம் தேதி (நாளை) முதல் டிச.14-ம் தேதி வரை காலை 7,30 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகங்கையில் உள்ள இந்தோ திபெத் எல்லை காவல் படை ஆள் சேர்ப்பு மையத்தின் வீரர்களால் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மேற்கொள்ளப்பட வுள்ளது. எனவே, இந்த பயிற்சி தளத்தில் மனித நடமாட்டம் இருக்கக் கூடாது எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in