

சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வருங்கால தொழில்நுட்பங்களில் உயர் ஆராய்ச்சி பணிகளை கூட்டு சேர்ந்து மேற்கொள்ளும் வகையிலும், எம்.டெக். மாணவர்களுக்கு வளாக நேர்காணல் பணி வாய்ப்புகள் அளிப்பது தொடர்பாகவும் டாடா பவர் நிறுவனமும், சென்னை ஐஐடியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி, புதிய தொழில்நுட்பங்களில் டாடா பவர் நிறுவனமும், ஐஐடியும் இணைந்து செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.