பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு - தமுமுக, எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்  பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட திரளான தமுமுகவினர். படம்: எல்.பாலச்சந்தர்
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட திரளான தமுமுகவினர். படம்: எல்.பாலச்சந்தர்
Updated on
1 min read

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட் டத்தில் தமுமுக, எஸ்டிபிஐ கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

ராமநாதபுரம் போக்கு வரத்துக்கழக கிளை முன் தமுமுக சார்பில் நடந்த ஆர்ப் பாட்டத்துக்கு கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் செரீப் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சலிமுல்லாகான், சாதிக் பாட்சா, இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மாநிலச் செயலாளர் அப்துல் காதிர் மண்பா, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செய லாளர் உசேன் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் வேலுச்சாமி, உலக தமிழர் பேரவை நிறுவனர் எழிலரசன், ராமநாதபுரம் வழக் கறிஞர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி உள்ளிட்ட பலர் பேசினர். இதில் திரளான பெண்கள் உள்ளிட்ட தமுமுக, மமக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பரமக்குடியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி தலைவர் முஹம்மது யூசுப் அன்சாரி தலைமை தாங்கி னார். நகர் தலைவர் அஹமது இப்ராஹிம் வரவேற்றார்.

மேற்கு மாவட்ட தலைவர் பரக்கத்துல்லா, பொருளாளர் ஹமீது சுல்தான், செயலாளர் சுல் தான் அலாவுதீன், வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் நஸீர் ஹுசைன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in