கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி : தூத்துக்குடி ஆட்சியரிடம் பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர். (அடுத்த படம்)  குழந்தையுடன் தரையில் அமர்ந்து தர்ணா செய்த அழகுநாச்சியாபுரத்தை சேர்ந்த மாரியம்மாள். 			       படங்கள்: என்.ராஜேஷ்
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர். (அடுத்த படம்) குழந்தையுடன் தரையில் அமர்ந்து தர்ணா செய்த அழகுநாச்சியாபுரத்தை சேர்ந்த மாரியம்மாள். படங்கள்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடாததால் பால் உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும், கோமாரி நோய்க்கு தடுப்பூசி போட உடனடியாக ஏற்பாடு செய்யவும் வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மாவட்ட பொருளாளர் எம்.பாலமுருகன் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பெருமளவில் கோமாரி நோய் பரவி வருகிறது. தமிழக அரசு சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. எனவே, கால்நடைகள் அதிகம் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடுகிறது. இதனால் பால் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கோமாரி நோய்க்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்து கால்நடைகளை பாதுகாக்கும் படி கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கி மீது புகார்

எங்கள் வங்கி கணக்கில் நகை அடமானம் வைத்த பணம் இருந்தும், அதனை விவசாய தேவைகளுக்கு எடுக்க முடியவில்லை. மேலும், கடன் தள்ளுபடி திட்டம் உங்களுக்கு பொருந்தாது என்றும், வட்டியை செலுத்திவிட்டு நகைகளை திருப்பிக் கொள்ளுங்கள் எனவும் கூறுகின்றனர். நகைக்கான பணத்தையே நாங்கள் பெறாமல் எப்படி வட்டி கட்ட முடியும். எனவே, இப்பிரச்சினையில் ஆட்சியர் தலையிட்டு முதல்வரின் அறிவிப்பு படி எங்களது நகைகளுக்கான கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’.

பயிர்கள் சேதம்

பெண் தர்ணா

எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்து, வழக்கு பதிவு செய்யப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஆட்சியர் தலையிட்டு எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in