

திருப்பத்தூர் அருகே குட்டையில் மூழ்கிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த திம்மராயசுவாமி வட்டத்தைச் சேர்ந்தவர் முனியன் (55). இவரது மனைவி தனலட்சுமி(50). முனியன் உயிரிழந்து விட்ட நிலையில், கூலி தொழில் செய்து வந்த தனலட்சுமி கோணாப்பட்டு அருகே உள்ள குட்டை பகுதி வழியாக நேற்று முன்தினம் மாலை நடந்துச் சென்றபோது தவறி குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர், தனலட்சுமி உடலை மீட்டு, பிரேதப்பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.