பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட -  கல்லூரி தாளாளருக்கு ஜாமீன்  :

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட - கல்லூரி தாளாளருக்கு ஜாமீன் :

Published on

திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தாளாளருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டியில் உள்ள நர்சிங் கல்லூரித் தாளாளர் ஜோதிமுருகன். இவர் மீது மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் கொடுத்த புகாரில் போக்ஸோ உட்பட 14 பிரிவுகளில் மூன்று வழக்குகளை தாடிக்கொம்பு போலீஸார் பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளில் விடுதி வார்டன் அர்ச்சனா கைது செய்யப்பட்டார். கல்லூரித் தாளாளர் ஜோதிமுருகன் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீ ஸார் பழநி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், தாளாளர் ஜோதிமுருகன் ஜாமீன் கோரி திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதில் ஜாமீன் வழங்கி நீதிபதி புருஷோத்தமன் உத்தரவிட்டார்.

பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். ரூ.20 ஆயிரம் பிணைத் தொகை செலுத்த வேண்டும். வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் ஆகிய நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in