தஞ்சாவூர் வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் :

தஞ்சாவூர் வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் :
Updated on
1 min read

தஞ்சாவூர் வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியபோது, “நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கடந்த பொதுத் தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். அதேபோல, வரும் தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற திமுகவினர் உணர்வுப்பூர்வமாக பணியாற்ற வேண்டும்” என்றார்.

கூட்டத்தில் எம்.பிக்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், செ.ராமலிங்கம், அரசு கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை க.அன்பழகன், அண்ணாதுரை, டி.கே.ஜி.நீலமேகம், அசோக்குமார், திமுக மாவட்டச் செயலாளர்கள் சு.கல்யாணசுந்தரம், ஏனாதி.பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in