

சங்கராபுரத்தில் செல்வகணபதி, என்பவருக்குச் சொந்தமான பட்டாசுக் கடையில் கடந்த அக்.26-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் உயிர்சேதங்கள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டன. இது தொடர்பாக கள்ளக் குறிச்சி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, நாளை மறுதினம் (டிச.8) காலை 11 மணியளவில் சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலத்தில் மாவட்ட வருவாய் அலுவலரால் விசாரணை நடத்தப்படவுள்ளது. விபத்து ஏற்பட்ட நாளன்று வெடிவிபத்து குறித்து தங்களுக்கு தெரிய வரும் விவரங்களை நேரில் ஆஜராகி தெரிவிக்கலாம் என டிஆர்ஓ விஜய்பாபு தெரிவித் துள்ளார்.