Published : 05 Dec 2021 04:07 AM
Last Updated : 05 Dec 2021 04:07 AM

அறிவியல் நிலையத்தில் வெங்காய விதை விற்பனை :

திருப்பூர்: பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சிறிய வெங்காய விதை விற்பனைக்கு உள்ளது. இது தொடர்பாக வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சிறிய வெங்காயம் கோ- 6 விதை விற்பனைக்கு உள்ளது. இது நாற்று விட்டு நடும் வெங்காயம் ஆகும். நாற்றின் வயது 40 நாட்கள். நடவு செய்த பின் 90 நாட்களில் அறுவடைக்கு வரும். ஒரு கிலோ விதையின் விலை ரூ. 4 ஆயிரம். மகசூல் ஏக்கருக்கு 7 டன் கிடைக்கும். தொடர்புக்கு, பொங்கலூர் அறிவியல் நிலையத்தின் பண்ணை மேலாளரை 9843931043 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x