கிருஷ்ணகிரி அணையில் 667 கனஅடி நீர் திறப்பு :

கிருஷ்ணகிரி அணையில் 667 கனஅடி நீர் திறப்பு :

Published on

கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 667 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்புப் பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை பெய்வது படிப்படியாக குறைந்ததால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியது.

அதன்படி கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 1079 கனஅடியிலிருந்தது நேற்று காலை 984 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுற பாசனக் கால்வாய்கள் வழியாக 667 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் 50.95 அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மிதமான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி (மில்லிமீட்டரில்) சூளகிரி 8, தேன்கனிக்கோட்டை 6, தளி 5, ஓசூர், அஞ்செட்டியில் 2 மிமீ மழை பதிவாகி இருந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in