

வில்லியனூர் அருகே ஒதியம்பட்டு மாதா கோயில் வீதியைச் சேர்ந் தவர் வென்சின் மேரி (27). முது நிலை பட்டம் முடித்த இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
அவருக்கு பெற்றோர் திரு மண ஏற்பாடுகளை செய்து வந் ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக வென்சின்மேரி துத்திப்பட்டு மேட்டுத் தெருவில் வசிக்கும் தனது உறவினர்கள் வீட்டில் தங்கிருந்தார். நேற்று முன்தினம் பிற்பகல் வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்ற நிலையில், வென்சின்மேரி திடீ ரென மாயமானார்.
இதுகுறித்து சேதராப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், வென்சின்மேரியுடன் அதே பகுதியைச் சேர்ந்த ஐஆர்பிஎன் காவலர் ஒருவர் பழகி வந்தது தெரியவந்தது.
அவருக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்த நிலையில்,பாதுகாப்புக்காக வென்சின் மேரியை அவரது பெற்றோர் துத்திப் பட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்ததும், தற்போது அங்கிருந்து அவர் ஐஆர்பிஎன் காவலரால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.