Published : 05 Dec 2021 04:07 AM
Last Updated : 05 Dec 2021 04:07 AM
திட்டக்குடியில் நேற்று நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் 1,508 பேருக்கு பணி ஆணை வழங்கினார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை சார்பில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் நேற்று வேலைவாய்ப்பு முகாம் கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பால சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழகம் முழுவதிலுமிருந்து 123 நிறு வனங்கள் பங்கேற்றன. காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற முகாமில் 5,538 வேலைநாடுநர்கள் பங்கேற்றனர். இதையடுத்து நேர்முகத் தேர்வின் மூலம் 1,508 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் பணி ஆணை களை வழங்கினார்.
இதையடுத்து அமைச்சர் சி.வெ.கணேசன் கூறுகையில், "பின்தங்கிய பகுதியான இப் பகுதியில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி அவதிப்பட்டு வந்தனர். தமிழக முதல்வரின் அறிவு றுத்தலின் பேரில், முகாமிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. படித்த இளைஞர்கள் பலர் முகாமில்கலந்துகொண்டு தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களை தேர்வு செய்து பணி ஆணை பெற் றுள்ளனர். இதன்மூலம் அவர்களின் குடும்ப வருவாய்க்கு உத்தரவாதம் கிடைத்துள்ளது. இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும். படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை இருக்கக் கூடாது என்பதே முதல்வரின் எண்ணம். அதை நிறைவேற்றுவோம்" என்றார். கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிகாட்டு மையத்தின் உதவி இயக்குர் எசகான் அலி நன்றி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT