Published : 05 Dec 2021 04:08 AM
Last Updated : 05 Dec 2021 04:08 AM

குமரியில் மழைநீர் ஒழுகியதால் - 29 பேருந்துகளின் தகுதிச்சான்று ரத்து :

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கூரை சேதமடைந்ததால், மழைநீர் ஒழுகி பயணிகள் அவதிக்குள்ளான, 29 அரசு பேருந்துகளின் தகுதிச்சான்றுகளை ரத்து செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையில் அரசு பேருந்துகளுக்குள் மழைநீர் ஒழுகியது குறித்து பயணிகள் மத்தியில் விமர்சனம் எழுந்தது. குறிப்பாக, தக்கலையில் இருந்து நாகர்கோவில் சென்ற பேருந்துக்குள் மழைநீர் கொட்டியதும், ரெயின்கோட் அணிந்தபடி ஓட்டுநர் பேருந்தை இயக்கியதும், பயணிகள் குடைபிடித்தவாறு பயணம் செய்ததும் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதைத்தொடர்ந்து, கடந்த 4 நாட்களாக நாகர்கோவில், மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் குமரி மாவட்ட அரசு பேருந்துகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பல பேருந்துகள் மேற்கூரை சேதமடைந்து மிகவும் பழுதான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. சேதமடைந்த 29 அரசு பேருந்துகளின் தகுதிச்சான்றை ரத்து செய்து, அவற்றை இயக்குவதற்கு தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட பேருந்துகள் இயங்கிய வழித்தடத்தில், மாற்று பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x