

கருங்கல் அருகே மாங்கரை அழுக்காணிவிளையைச் சேர்ந்தவர் சேம் ஐசக் ஸ்டாலின் (68). இவரது மகன்கள் வெளியூரில் வசிக்கும் நிலையில், இவரும், இவரது மனைவியும் மட்டும் வீட்டில் இருந்தனர். வீட்டில் மாடிகட்டுமான வேலை நடக்கிறது. மாடிப்படிக்கட்டில் கைப்பிடிச் சுவர் இல்லாத நிலையில், மாடியில் இருந்து கீழே இறங்கிய சேம்ஐசக் ஸ்டாலின் நிலைதடுமாறி கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கருங்கல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.