தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் மழை :

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு தாமதமாக  விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவிகள் மழையில் நனைந்தவாறு வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். 		       		            படம் : என்.ராஜேஷ்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு தாமதமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவிகள் மழையில் நனைந்தவாறு வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். படம் : என்.ராஜேஷ்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த25-ம் தேதி கனமழை பெய்தது. தூத்துக்குடி மாநகரின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.பிரையண்ட் நகர், அம்பேத்கர்நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத்நகர், ராம்நகர், ஆதிபராசக்தி நகர்உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெள்ளம்சூழ்ந்து நிற்பதால் பொதுமக்கள்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள னர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கு பின்னர் கோவையில் இருந்து ரூ.52.17 லட்சம் செலவில் கூடுதலாக 7 ராட்சத மோட்டார் பம்புகள் தூத்துக்குடி வரவழைக்கப்பட்டு, முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர் ஆகிய பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.

மீண்டும் மழை

தூத்துக்குடியில் மழை பெய்யும்என்று எந்தவித அறிவிப்பும் வராத நிலையில் தொடர்ந்து பெய்தமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காலதாமதமாக அறிவிக்கப்பட்டாலும் மாணவ-மாணவிகள் நலன் கருதியே விடுமுறை விடப்பட்டது என்று மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே கடந்த வாரம் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி நடந்து வரும் நிலையில், நேற்று பெய்த மழை காரணமாக மீண்டும் அப்பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலை உருவானது.

இந்நிலையில், மாநகராட்சிக் குட்பட்ட தனசேகரன் நகர், நியாய விலைக் கடை பகுதி, எட்டயபுரம் சாலை மற்றும் புலிபாஞ்சான்குளம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீரை வெளியேற்றும் பணியை ஆட்சியர் கி.செந்தில்ராஜ் பார்வையிட்டார். அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். விரைவில் வீடுகளைசூழ்ந்துள்ள மழைநீர் முழுவதுமாக அகற்றப்படும் என அவர் தெரி வித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in