திருவண்ணாமலை மாவட்டத்தில் கோமாரி நோய் தாக்கி - உயிரிழந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

திருவண்ணாமலையில் ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

கோமாரி நோய் தாக்கி உயிரிழந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

தி.மலை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, “தி.மலை மாவட்டத்தில் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களையும் கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் நெல் சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டுள்ளதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். மழை வெள்ளத்துக்கு காரணமாக உள்ளநீர்நிலைகள் மற்றும் நீர்வழி பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு தரமான மாட்டுக் கொட்டகை அமைத்து கொடுக்க வேண்டும். தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் நிலுவையில் உள்ள கரும்பு கொள்முதல் செய்யப் பட்ட தொகையை பெற்றுத் தர வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங் களில் பயிர் மற்றும் நகைக்கடன் வழங்க வேண்டும்.

கோமாரி நோய் தாக்கி கால் நடைகள் உயிரிழந்து வருவதால், நாட்டு மருந்து மூலம் சிகிச்சை அளித்து கால்நடைகளை காப் பாற்ற வேண்டும். மேலும், கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும். கோமாரி நோயால் உயிரிழந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்றனர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி உள் ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in