மக்களின் தேவைகள் அறிந்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது : அமைச்சர் பொன்முடி பெருமிதம்

விக்கிரவாண்டியில் நடைபெற்ற விழாவில் பயனாளிக்கு அமைச்சர் பொன்முடி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
விக்கிரவாண்டியில் நடைபெற்ற விழாவில் பயனாளிக்கு அமைச்சர் பொன்முடி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
Updated on
1 min read

மக்களின் தேவைகள் அறிந்து ஒவ்வொரு திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

விக்கிரவாண்டி மற்றும் கண்டாச்சிபுரத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கீழ் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் 1,615 பயனாளிகளுக்கு ரூ.10,51,39, 290 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பொன்முடி வழங்கி பேசியது:

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. மக்களின் தேவைகள் அறிந்து ஒவ்வொரு திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நலத் திட்டங்களை பெறும் பயனாளிகள் முதல்வருக்கு எப்போதும் துணையாக இருந்திட வேண்டும் என்றார்.

முன்னதாக உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு 21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6,54,800 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் ஆட்சியர் மோகன், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன்,மாவட்ட வருவாய் அலுவலர். ராஜசேகரன், திட்ட இயக்குநர் சங்கர், வேளாண் இணை இயக்குநர் ரமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in