Published : 03 Dec 2021 03:07 AM
Last Updated : 03 Dec 2021 03:07 AM

ஈரோட்டில் கொட்டிய கனமழையால் மக்கள் பாதிப்பு : பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 9534 கனஅடியாக அதிகரிப்பு

ஈரோட்டில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில், நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலை யில் ஈரோடு நகரில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை இரவு முழுவதும் பெய்தது. இதனால், நகரின் பல்வேறு இடங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளில் நீர்தேங்கி, சேறும், சகதியுமாக மாறியது.

இந்த சாலைகளில் நேற்று பயணித்த வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகினர். வ.உ.சி.பூங்கா மைதானத்தில் செயல்படும் காய்கறிச் சந்தையில், மழைநீர் தேங்கியதால், வியா பாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். வைரா பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் மழையால் சாய்ந்தன.

ஈரோடு மாவட்ட மழையளவு விவரம் (மி.மீ):

ஈரோடு 58, குண்டேரிப்பள்ளம் 17, கவுந்தப்பாடி 15.2, நம்பியூர் 12, சத்தியமங்கலம் 10, பவானி, அம்மாபேட்டை 5.2, கொடிவேரி அணை 4.2.

பவானிசாகர் அணை

பவானிசாகர் அணையில் 105 அடிவரை நீரினைத் தேக்கிவைக்க முடியும் என்ற நிலையில், அணையின் நீர்மட்டம் கடந்த இரு நாட்களாக 104.5 அடியாக நீடிக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி, நீர் வரத்து முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 9534 கனஅடி நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு 1800 கனஅடியும், பவானி ஆற்றில் உபரி நீராக 7700 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x