‘இல்லம் தேடி கல்வி’திட்டம் நீலகிரி மாவட்டத்தில் தொடக்கம் :

‘இல்லம் தேடி கல்வி’திட்டம் நீலகிரி மாவட்டத்தில் தொடக்கம் :
Updated on
1 min read

கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காக, தன்னார்வலர்களைக் கொண்டு தினமும் 1½ மணி நேரம்கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், பள்ளி கல்வித் துறை மூலமாக ‘இல்லம் தேடி கல்வி'திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதில் ஆர்வமுள்ள தன்னார்வலர்களை தேர்வு செய்து, உரியபயிற்சி வழங்கி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாசருதீன் கூறும்போது, "உதகை - 20, கோத்தகிரி - 41, குன்னூர் - 22, கூடலூர் - 37 என நீலகிரி மாவட்டத்தில் 122 இடங்களில் ‘இல்லம் தேடி கல்வி திட்டம்' தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக விருப்பம் தெரிவித்த 2,600 தன்னார்வலர்களில், தற்போது 101 தன்னார்வலர்கள் பயிற்சி முடித்துள்ளனர். பிறருக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது," என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in