திருக்கோவிலூர் அருகே தரைப்பாலத்தில் - காருடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் உடல் மீட்பு :

திருக்கோவிலூர் அருகே காருடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவரின் உடலை தேடும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.
திருக்கோவிலூர் அருகே காருடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவரின் உடலை தேடும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

திருக்கோவிலூர் அருகே காரு டன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் உடல் நேற்று மீட்கப் பட்டது.

திருக்கோவிலூர் அருகே கிளியூரைச் சேர்ந்த ஆனந்தன் என்ப வரது தந்தை உளியான் கால மானார். இதையொட்டி அதே கிராமத்தைச் சேர்ந்த கிளியான், சங்கர் ஆகியோர் உளியானின் இறுதி சடங்கில் பங்கேற்க பெங்களூருவில் இருந்து வந்த உறவினர் களை அழைத்து வருவதற்காக கடந்த 29-ம் தேதி இரவு திருக் கோவிலூருக்கு முருகன் என்பவ ரது வாடகை காரில் சென்றனர். மொகலார் என்ற இடத்தில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது. இரவு நேரம்என்பதால், தண்ணீர் எந்த அளவுக்கு செல்கிறது என்பது தெரியாமல், அந்த வழியாக அவர்கள் காரில் கடந்து செல்லமுயன்றனர்.

அப்போது தரைப் பாலத் தின் சென்றபோது, கார்வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிளியான் மற்றும் சங்கர் இருவரும் தப்பினர்.

இந்நிலையில் காருடன் அடித்துசெல்லப்பட்டவர்களை போலீஸா ரும், தீயணைப்பு துறையினரும் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை பொதுமக்களோடு பொது மக்களாக நின்று கிளியான் மற்றும் சங்கர் ஆகியோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களும் அடித்து செல் லப்பட்டதாக நேற்று முன் தினம் மீட்புக்குழுவினர் தேடிவந்தனர். சிறிது நேரத்திற்கு பின்பே இரு வரும் தப்பி கரையேறிவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து அரக்கோணத்தி லிருந்து நேற்று வந்திருந்த தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் முருகனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தாரைப்பாலம் அருகே 100 மீட்டர் தூரத்தில் 20 ஆழத்தில் காருக்குள் இறந்த நிலையில் முருகன் உடலை நேற்று பிற்பகல் தேசிய பேரிடர்மேலாண்மை மீட்புக் குழுவினர் மீட்டனர். இதுகுறித்து திருக்கோவி லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in