

திருப்பூர் மாநகரில் 42 மற்றும் 43 ஆகிய வார்டுகளில், முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பூச்சக்காடு குடிநீர் வழங்கல் அலுவலகத்தை நேற்று மக்கள் முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
அதில், ‘மழைக் காலங்களில்கூட இப்பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் குடிநீர் வரும் நாட்களில், வேலைக்கு செல்லாமல் தண்ணீர் பிடித்து வைக்கும் அவலம் உள்ளது.
பொதுமக்களுக்கு தட்டுப் பாடின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.