

போரூர் அருகே முகலிவாக்கத்தில் 35 படுக்கைகளுடன் நவீன சிகிச்சை அளிக்கும் வகையில் டெல்டா மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மக்களுக்குமேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்கும் வகையில் 4 தளங்களுடன், 8500சதுர அடி பரப்பளவில், 35 படுக்கைகளுடன் டெல்டா மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.
இம் மருத்துவமனையை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
இங்கு அவசர சிகிச்சைப் பிரிவு, பிறந்த குழந்தைகளுக்கான தீவிரசிகிச்சை பிரிவு, பிரசவப் பிரிவு, டயாலிசிஸ், அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் மருந்தகம் ஆகியவை உள்ளன.
மயக்க மருந்து நிபுணர், எலும்பியல் நிபுணர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவுடன் விபத்துகளால் ஏற்படும் காயங்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில்‘சி-ஆர்ம்’ தொழில்நுட்பத்துடன் கூடிய அறுவை சிகிச்சை பிரிவும் இங்கு உள்ளது.
சுகப்பிரசவம்
மயக்கவியல் துறை தலைவரும் மருத்துவ இயக்குநருமான டாக்டர் அமித் கூறும்போது, “பிறந்த குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருத்துவ வசதிகளை எங்கள் மருத்துவமனை கொண்டுள்ளது” என்றார்.
குழந்தையின்மைக்கான சிகிச்சை,குழந்தைகளுக்கான சிகிச்சை, சிறுநீரகவியல், இதயவியல், எலும்பியல், நரம்பியல், இரைப்பை குடல் சிகிச்சைகள், லேப்ராஸ்கோபி போன்றவையும் இங்கு உள்ளது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.