சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு ஆயுள் தண்டனை :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு ஆயுள் தண்டனை  :
Updated on
1 min read

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த தாக சிறுமியின் தந்தை கணேச மூர்த்தியை 2015-ல் மேலூர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கை மதுரை மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில், கணேசமூர்த்திக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ராதிகா நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து கணேசமூர்த்தி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுரை செக்காணூரணியைச் சேர்ந்த 14 வயது சிறுமி 2014-ம் ஆண்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மோகனப் பிரகாஷ்(31), ஜெயப் பிரகாஷ்(21) ஆகியோரைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை நீதிபதி ராதிகா விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட இருவருக்கும் தலா 31 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.57,000 அபராதம் விதித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in