மலேசியாவில் இருந்து வந்தவர் இரட்டை கொலை வழக்கில் கைது :

மலேசியாவில் இருந்து வந்தவர் இரட்டை கொலை வழக்கில் கைது :

Published on

ராமநாதபுரம் மாவட்டம், வாலாந் தரவையில் முன்விரோதத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த கார்த்திக், விக்னேஷ்பிரபு ஆகியோர் 2018-ல் கொலை வழக்கு ஒன்றில் கேணிக்கரை காவல்நிலையத்தில் கையெ ழுத்திட்டு திரும்பியபோது கும்ப லால் கொலை செய்யப்பட்டனர்.

இந்த இரட்டைக் கொலை வழக்கில் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 13 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேரை போலீஸார் தேடி வந்தனர். இதில் ஒருவரான வாலாந்தரவை அம்மன் கோவில் பகுதி சந்திரன்(37) மலேசியாவில் இருப்பதாகக் கூறப்பட்டது. அதனால் போலீஸார் அனைத்து விமான நிலையங்களுக்கும் சந்திரன் மீதுள்ள இரட்டை கொலை வழக்கு தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியிருந் தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் வந்திறங்கிய சந்திரனை குடியேற்றத்துறை அதிகாரிகள் பிடித்து கேணிக்கரை போலீ ஸாரிடம் ஒப்படைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in