ஒகேனக்கல்லுக்கு நேற்று சுற்றுலா வந்த பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் பரிசலில் சென்று காவிரியின் அழகை கண்டு மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்லுக்கு நேற்று சுற்றுலா வந்த பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் பரிசலில் சென்று காவிரியின் அழகை கண்டு மகிழ்ந்தனர்.

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு :

Published on

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் விநாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஏற்கெனவே பிரதான அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட இடங்களில் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பயணிகள் பரிசல் சவாரி செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று பயணிகள் பரிசலில் சென்று காவிரியின் அழகை பார்த்து மகிழ்ந்தனர்.

மேலும், வழக்கத்தை விட பயணிகள் வருகை குறைவாக இருந்ததால் பெரும்பாலான பரிசல் இயக்கப்படவில்லை என பரிசல் ஓட்டிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி அணை

இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையளவு (மில்லமீட்டரில்) விவரம்: தளி 5, ஓசூர் 4, தேன்கனிக்கோட்டை 3, சூளகிரி, நெடுங்கல் 2, பாரூரில் 1 மிமீ மழை பதிவானது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in