

திருப்பத்தூர் அருகே காரையூர் இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் குமுதினி. இவர் திருப்பத்தூர் புதுத்தெருவில் தையல்கடை நடத்தி வருகிறார்.
அவரது கடைக்கு முன்பாக பை கிடந்தது. அதில் ரூ.20 ஆயிரம், மொபைல்போன், 4 சேலைகள், 2 ஏடிஎம் கார்டுகள், அடையாள அட்டை போன்றவை இருந்தன. அவற்றை அவர் திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து அடையாள அட்டை மூலம் பையை தவறவிட்டவர் பிள்ளையார்பட்டியில் உள்ள வங்கியில் பணிபுரியும் தாமரைச்செல்வி என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தாமரைச்செல்வியை வரவழைத்து அவரது பணம், பொருட்களை இன்ஸ் பெக்டர் சித்திரைச் செல்வி ஒப்படைத்தார். கீழே கிடந்த பணப்பையை ஒப்படைத்த குமுதினியை அனைவரும் பாராட்டினர்.