

உதகை தாவரவியல் பூங்காவில் அடுத்த ஆண்டு மே மாத சீசனுக்காக விதைப்புப் பணிகள் சில தினங்களுக்கு முன் தொடங்கின. இந்நிலையில், 35,000 தொட்டிகளை தயார்படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பூங்கா ஊழியர்கள் கூறும்போது, ‘‘ தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கு தொட்டிகளில் நடவு செய்யப்பட்டிருந்த மலர் செடிகளை அகற்றிவிட்டோம். உரம் கலந்த மண்ணை தொட்டிகளில் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. செடிகள் வளரும் காலங்களுக்கு ஏற்ப தொட்டிகளில் விதைப்பு மற்றும் நடவுப் பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போது நடவு செய்தால், ஏப்ரல் மாதத்தில் மலர்களைக்காண முடியும். அதுவரை கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகள், கள்ளிச் செடிகள், பெரணி செடிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம்,’’ என்றனர்.