கடலூரில் நடந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் ஐயப்பன் எம்எல்ஏ லாரி ஓட்டுநர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
கடலூரில் நடந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் ஐயப்பன் எம்எல்ஏ லாரி ஓட்டுநர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

கடலூரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா :

Published on

கடலூரில் நடந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாள் விழாவில் எம்எல்ஏ ஐயப்பன் லாரி ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கடலூர் செம்மண்டலத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா திமுக சார்பில் நேற்று நடந்தது. கடலூர் எம்எல்ஏ ஐயப்பன் தலைமை தாங்கி கடலூர் திடீர் குப்பம், குண்டு சாலை, மணக்கொல்லை, புருஷோத்தமன் நகர், வண்ணான்குட்டை, பிரப்பன் குட்டை உள்ளிட்ட பல பகுதியை சேர்ந்த 6 ஆயிரம் மக்களுக்கு அன்னதானம் மற்றும் 200 லாரி ஓட்டுநர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி ஆகியவற்றை வழங்கினார். திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி, நகர செயலாளர் ராஜா, டாக்டர் பிரவீன் ஐயப்பன், கடலூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், அரிமா சங்கத் தலைவர் ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in