

விருதுநகர் மாவட்ட எஸ்பி மனோகர் கூறியதாவது: ஒவ்வொரு காவல் நிலைய சரகத்தில் வசிக்கும் மூத்த குடிமக்களின் குறிப்பாக தனியாக வாழ்பவர்களின் பெயர்களைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மூத்த குடிமக்களின் புகார்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக காவல் துறையினரால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் இலவச தொலைபேசி எண் 14567 செயல்படுகிறது, என்றார்