மானாமதுரை வைகை ஆற்றில் - தற்கொலைக்கு முயன்ற பெண் :

வைகை ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற மல்லிகாவை காப்பாற்றி அழைத்து வந்த காவலர் பாலமுருகன்.
வைகை ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற மல்லிகாவை காப்பாற்றி அழைத்து வந்த காவலர் பாலமுருகன்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காவலர்கள் சாமர்த்தியமாக பேசி காப்பாற்றினர்.

தொடர் மழையால் வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டோடு கிறது.

இந்நிலையில் நேற்று மானா மதுரை பிருந்தாவனத்தைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி மல்லிகா (35) தனது கணவரோடு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திடீரென அழகர்கோயில் அருகே உள்ள வைகை ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயன்றார். அவ்வழியாக வந்த காவலர்கள் பாலமுருகன், ராஜேஷ் ஆகியோர் மல்லிகாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் மல்லிகா ஆற்றின் மையப் பகுதிக்குச் சென்றுவிட்டார். இதையடுத்து காவலர் பாலமுருகன் ஆற்றில் இறங்கி மல்லிகாவிடம் சாமர்த்தியமாக பேசி கரைக்கு அழைத்து வந்தார்.

பின்னர் காவல்நிலையத்துக்கு மல்லிகாவின் கண வரை வரவழைத்து போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

தற்கொலைக்கு முயன்ற பெண்ணை சாமர்த்தியமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர் களுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in