சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரியில்  -  இருசக்கர வாகனம் திருடியவர் கைது 44 வாகனங்கள் பறிமுதல் :

சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரியில் - இருசக்கர வாகனம் திருடியவர் கைது 44 வாகனங்கள் பறிமுதல் :

Published on

சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இரண்டு சக்கர வாகனம் திருடியவரை போலீஸார் கைது செய்து, 44 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

சேலம் நகர குற்றப்பிரிவு ஆய்வாளர் விஜயகுமாரி தலைமையிலான போலீஸார் டவுன் ராஜாஜி சிலை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை போலீஸார் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், சின்னப்பம் பட்டியைச் சேர்ந்த ஜனார்த்தனன் (27) என்பதும், இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வருபவர் என்பதும் தெரிந்தது.

தீவிர விசாரணையில் சேலம் மாநகரில் 21 இருசக்கர வாகனமும், மாவட்ட பகுதியில் 4, ஈரோடு 4, நாமக்கல் 8, தருமபுரியில் 2, திருப்பூரில் 2 மற்ற இடங்களில் மூன்று என மொத்தம் 44 இருசக்கர வாகனங்கள் திருடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஜனார்த்தனனை கைது செய்த போலீஸார் 44 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இருசக்கர வாகனங்களை மீட்ட காவல் துறையினரை மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா பாராட்டினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in