தென்னிந்திய பல்கலை.க்கு இடையிலான இறகுப்பந்து போட்டி : பரமக்குடி கல்லூரி மாணவர் தேர்வு

தென்னிந்திய பல்கலை. இடையிலான இறகுப்பந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட பரமக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவர் கோபி கிருஷ்ணனிடம் அதற்கான ஆணையை வழங்கிய  கல்லூரி முதல்வர் குணசேகரன்.
தென்னிந்திய பல்கலை. இடையிலான இறகுப்பந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட பரமக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவர் கோபி கிருஷ்ணனிடம் அதற்கான ஆணையை வழங்கிய கல்லூரி முதல்வர் குணசேகரன்.
Updated on
1 min read

தென்னிந்திய பல்கலைக்கழகங்களுகக்கு இடையிலான இறகுப்பந்து போட்டிக்கு பரமக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம், குண்டூர் கேஜிஎப் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான, தென்னிந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையே இறகுப்பந்து போட்டி டிசம்பர் 6 முதல் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான அழகப்பா பல்கலைக்கழக அணி வீரர்கள் தேர்வு போட்டியில் பல்வேறு கல்லூரி அணிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 6 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், பரமக்குடி அரசு கலைக்கல்லூரி வணிகவியல் துறை மாணவர் கோபி கிருஷ்ணனும் தேர்வு செய்யப்பட்டார். அவரை உடற்கல்வி இயக்குநர் பிரசாத், துறைத் தலைவர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in