சுகாதார சீர்கேட்டை கண்டித்து - செல்லூரில் மக்கள் மறியல் :

சுகாதார சீர்கேட்டை கண்டித்து -  செல்லூரில் மக்கள் மறியல் :
Updated on
1 min read

மதுரை செல்லூரில் பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சியில் புகார் தெரிவித்தும், இப்பிரச்சினைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள சுகாதாரக்கேடால் பொதுமக்கள், குழந்தைகளுக்கு நோய் பரவுகிறது.

இதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செல்லூர்-குலமங்கலம் மெயின்ரோட்டில் பொதுமக்கள் நேற்று காலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் வந்து மக்களிடம் பாதாள சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in