உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் போட்டியிட கூடுதல் இடங்களை பெற வலியுறுத்தல் :

உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் போட்டியிட கூடுதல் இடங்களை பெற வலியுறுத்தல் :
Updated on
1 min read

நாகப்பட்டினம்: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவர் அமிர்த ராஜா தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் முகமது ரபிக், அகமது ரியாஸ், நகரத் தலைவர் உதயசந்திரன், மாவட்டச் செயலாளர் நிலோபர், மாணவர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கோபிநாத் மற்றும் தமிழரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற திமுக- காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் அதிகமானோர் போட்டியிடும் வகையில் அதிக இடங்களை திமுகவிடம் கேட்டுப் பெறவேண்டும். அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் மழை, வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in