Published : 25 Nov 2021 03:12 AM
Last Updated : 25 Nov 2021 03:12 AM

கோவை மேற்கு சுழற்சங்கம் சார்பில் இளம் சாதனையாளர்களுக்கு பாராட்டு :

கோவை மேற்கு சுழற்சங்கம் சார்பில் மாணவர்களின் தலைமைப் பண்புகளை மேம்படுத்தும்பயிற்சி வகுப்புகள், இளம் சாதனையாளர்களுக்கு பாராட்டுவிழா ஆகியவை கோவை நேஷனல் மாடல் பள்ளி, எஸ்இஎஸ் பள்ளி ஆதரவுடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய அளவில் மற்றும் உலக அளவில் சாதனை புரிந்த இளம் சாதனை யாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது. அதன்படி, பிரியதர்சினி, கீர்த்திமாலினி (ரோலர் ஸ்கேட்டிங்), அட்லின் பிரியசிஸ் ஜோபின் (சமுதாய நல புதியதொழில்நுட்ப கண்டுபிடிப்பு), உமாநந்தினி(பாடகர்), நிவேதா வி.நாயர் (துப்பாக்கி சுடுதல்),ஆதர்ஷ் விக்ரம் (பல்துறை விளையாட்டு), ஜனனி,பயாஸ் அகமது, அலெக்ஸ் ஜெவர்சன், ஷபானா(மென்பொருள் துறை ஹெகேத்லான்) ஆகியோருக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x