

காய்கறிகளின் விலை 3 மடங்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் புதுச்சேரியில் மக்கள்வாங்குவதை குறைத்துள்ளனர். மார்க்கெட், உழவர் சந்தைகள் வெறிச்சோடி காணப் படுகின்றன.
கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா,புதுச்சேரி என தென் மாநிலங்கள் முழு வதும் தொடரும் மழை காரணமாக காய்கறிவிளைச்சல் மிகக்குறைவாக இருக்கிறது. புதுச்சேரிக்கு நாளொன்றுக்கு 50 டன்வெங்காயம், 20 டன் தக்காளி தேவைப் படுகிறது. மற்ற காய்கறிகளுடன் சேர்த்து நாள் ஒன்றுக்கு 300 டன் காய்கறி புதுச் சேரிக்கு வரும்.
மழையால் விளைச்சல் குறைந்து, குறைந்த அளவிலேயே வருகின்றன. அதனால் விலை அதிகரித்துள்ளது. 10 ரூபாய்க்குவிற்ற தக்காளி மழைக்குப் பின் ஒரு கிலோ 85 ல் இருந்து 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெங்காயம், உருளை, கேரட், பீட்ரூட் போன்ற அனைத்து காய் கறிகள் விலையும் 3 மடங்கு உயர்ந்து விற் பனை செய்யப்படுகிறது.
வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரிக்கு தேவையான காய்கறிகள் தென்மாநிலங்களில் இருந்து தான் வருகிறது. அங்கு மழை பெய்தால், வரத்து குறைந்து இங்கு பாதிப்பு ஏற்படும். விலை உயர்வால் மக்களும் அரை கிலோ, கால்கிலோ என குறைந்த அளவே வாங்கி செல்கின்றனர். காய்கறி வாங்குவோர் எண்ணிக்கை குறை வாகவே உள்ளது" என்றனர்.
காய்கறிகளின் கட்டுக்கடங்காத விலைஉயர்வால், வழக்கமாக நெரிசல் அதிகள வில் இருக்கும் புதுச்சேரி பெரிய மார்க்கெட், உழவர் சந்தைகள் போதிய மக்கள் வரவின்றி கடந்த இரு தினங்களாக வெறிச்சோடி கிடக்கின்றன.
கடலூரிலும் கடும் உயர்வு
“மழை பாதிப்பு டிசம்பர் மாதத்திலும் தொடரக் கூடும்.எனவே ஜனவரியில் தான் விலைகுறைந்து பழைய நிலை அடைய வாய்ப் புண்டு. இடையில் காய்கறிகளின் சற்றே குறைந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் வரத்தில் கெடுபிடி ஏற்பட்டு, விலை கூடுத லாகவே இருக்கும்” என்று கடலூர் மாவட்ட காய்கறி வணிகர்கள் தெரிவித்தனர்.
காய்கறிகளின் விலை விவரம்
(கிலோ அடிப்படையில்)தக்காளிரூ.85 - ரூ.100வெங்காயம்ரூ.40சாம்பார் வெங்காயம்ரூ.55உருளைரூ.40கேரட்ரூ.70பீட்ரூட்ரூ.40மாங்காய்ரு.50பீன்ஸ்ரூ.70நாட்டு அவரைரூ.80முள்ளங்கிரூ. 50கோஸ்ரூ.35பாகற்காய்ரூ.65முருங்கைக்காய்ரூ.160கத்தரிக்காய்ரூ.70 - ரூ.80சேப்பங்கிழங்குரூ.50வெண்டைக்காய்ரூ.70கீரைக்கட்டுரூ.30 - ரூ.50