

மரக்காணம் அருகே எம்.திருக்கனூர் நடுகுப்பத்தில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவிக்கு அப்பள்ளியில் பணிபுரியும் உதவி தலைமை ஆசிரியர் பழனிவேல் பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவியின் பெற்றோர்கள் நேற்று முன்தினம் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் கிருஷ்ணராஜ், கோட்டக்குப்பம் காவல் துணை கண்காணிப்பாளர் அருண், மரக்காணம் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்டோர் நடுக்குப்பத்தில் உள்ள பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து உதவி தலைமை ஆசிரியர் பழனிவேலை கீழ்மாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா நேற்று உத்தரவிட்டார்.