Regional02
ஆளுநருக்கு வரவேற்பு :
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் ஆளுநரை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வரவேற்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
