Published : 24 Nov 2021 03:07 am

Updated : 24 Nov 2021 03:07 am

 

Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரம் விநியோகம் : குறைதீர் கூட்டத்தில் கோட்டாட்சியர் தகவல் :

உடுமலை: தாராபுரத்தில் கோட்டாட்சியர் குமரேசன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசியதாவது: தாராபுரம் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக உரத்தட்டுப்பாடு நிலவுகிறது. உர விற்பனையாளர்கள், உரத்தை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். இணை உர தயாரிப்புகளை வாங்குவோருக்கு மட்டுமே உரம் வழங்கப்படும் என்ற நிலையும் உள்ளது. இதை தடுக்க வேண்டும்.கிராம நிர்வாக அலுவலர்கள் பயிர் கணக்கெடுப்பு பணியை முறையாக மேற்கொள்வதில்லை. விவசாயிகளின் முறையீடுகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதில்லை. மழை வெள்ள பாதிப்புகளின்போது ஏற்பட்ட சிக்கல்களை போக்க மின்வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை, என குற்றம்சாட்டினர்.

இதற்கு பதில் அளித்து கோட்டாட்சியர் குமரேசன் பேசும்போது, ‘‘விவசாயிகளின் கோரிக்கை மீது தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் செய்யாமலேயே பயிர் செய்ததாக சான்று கேட்டு வருவாய் துறையினருக்கு, விவசாயிகள் இடையூறு கொடுக்கக்கூடாது. உரத்தட்டுப்பாடு இல்லை. உரத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்,’’ என்றார்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x