நாமக்கல்லில் சிறப்பு சித்த மருத்துவ முகாமில் 293 பேருக்கு பரிசோதனை :

நாமக்கல்லில் சிறப்பு சித்த மருத்துவ  முகாமில் 293 பேருக்கு பரிசோதனை :
Updated on
1 min read

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் சார்பில் மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

முகாமில் நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் சார்பில் மழைக்கால நோய் தடுப்பு முறைகள், தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் மற்றும் சித்த மருத்துவ அறிவுரைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும், 293 நபர்களுக்கு பரிசோதனை செய்து சளி, இருமல், ஆஸ்துமா, காய்ச்சல் ஆகிய நோய்களுக்கு கபசுரக்குடிநீர், நிலவேம்பு குடிநீர் மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நடமாடும் மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாம் வாகனங்களை ஆட்சியர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in