வரதட்சணையால் பெண் தற்கொலை: கணவன் குடும்பத்தினரை கைது செய்யக்கோரி மறியல் :

வரதட்சணையால் பெண் தற்கொலை: கணவன் குடும்பத்தினரை கைது செய்யக்கோரி மறியல் :
Updated on
1 min read

செஞ்சி அருகே ஆனத்தூர் புது கால னியைச் சேர்ந்தவர் சம்பூர்ணம் (55). இவரது மகள் அபிதா (23). இவருக்கும் ஆலம்பூண்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் தட்சிணாமூர்த்திக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.

கடந்த 5 நாட்களுக்கு முன் அபிதாவிடம் அவரது கணவன் மற்றும் கணவனின் சகோதரி முத்துலட்சுமி, மாமியார் மல்லிகா, கணவனின் தம்பி முருகன், மாமனார் ஆறுமுகம் ஆகிய 6 பேரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, சண்டை போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அபிதா தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார், அவரை மீண்டும் கடந்த 21-ம் தேதி, தட்சிணா மூர்த்தி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வரதட்சணை கேட்டு, அபிதாவை திட்டி கொடுமை படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அபிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

பிரேத பரிசோதனைக்காக செஞ்சி மருத்துவமனையில் அபிதாவின் உடல்வைக்கப்பட்டது. இதற்கிடையே வரதட்சணை கேட்டு தற்கொலைக்கு தூண்டிய கணவன் உள்ளிட்டோரை செய்யக்கோரி அபிதாவின் உறவினர் கள் செஞ்சி அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த செஞ்சி டிஎஸ்பி.இளங்கோவன் உள்ளிட்ட போலீஸார் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அபிதாவின் கணவனை போலீஸார் கைது செய்தனர்.

மேலும், ஆர்டிஓ விசாரணையை தொடர்ந்து, உடனடியாக உடல் ஆய்வுகூறு நடைபெற்று பிரேதம் ஒப்படைக் கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in