Published : 24 Nov 2021 03:08 am

Updated : 24 Nov 2021 03:08 am

 

Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM

தேனி  தேனி மாவட்டம், வட வீரநாயக்கன்பட்டி துணை மின்நிலையத்தில் இன்று (நவ

தேனி

 தேனி மாவட்டம், வட வீரநாயக்கன்பட்டி துணை மின்நிலையத்தில் இன்று (நவ.24) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேனி ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம், புதிய பேருந்து நிலையம், தொழிற்பேட்டை, சிவாஜிநகர், அரப்படித்தேவன்பட்டி, வடபுதுப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி செயற்பொறியாளர் சொ.லட்சுமி தெரிவித்துள்ளார்.

கொடைக்கானல்

 கொடைக்கானல் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நவ.25-ல் நடைபெற உள்ளது. எனவே கொடைக்கானல் நகரம், வில்பட்டி, சவரிக்காடு, ஊத்து, மச்சூர், பெருமாள்மலை, பி.எல்.செட், பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பெரியூர், பாச்சலூர், கே.சி.பட்டி மற்றும் இதைச் சுற்றியுள்ள மலைகிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை வத்தலகுண்டு மின் பகிர்மான செயற்பொறியாளர் டி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x