Published : 24 Nov 2021 03:09 am

Updated : 24 Nov 2021 03:09 am

 

Published : 24 Nov 2021 03:09 AM
Last Updated : 24 Nov 2021 03:09 AM

நகைக்கடையில் வாடிக்கையாளர்போல நடித்து - 10 பவுன் சங்கிலியுடன் தப்பியோடிய இளைஞர் :

நாகப்பட்டினம்

நாகையில் வாடிக்கையாளர்போல நடித்து நகைக்கடையிலிருந்து 10 பவுன் சங்கிலியுடன் இளைஞர் தப்பியோடிவிட்டார்.

நாகை நாணயக்கார தெருவில் உள்ள கதிரவன்(55) என்பவருக்கு சொந்தமான நகைக் கடைக்கு நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வந்த 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், உறவினர் வீட்டு திருமணத்துக்காக நகை வாங்க வந்துள்ளதாக கூறியுள்ளார்.

எனவே, அந்த இளைஞருக்கு தங்கச் சங்கிலி மாடல்களை கதிரவன் காட்டியுள்ளார். அப்போது, அந்த இளைஞர் மோதிரமும் வேண்டும் எனக் கூறியதால், அருகில் இருந்த மோதிரங்களை எடுக்க கதிரவன் திரும்பியபோது, 10 பவுன் தங்கச் சங்கிலியை எடுத்துக் கொண்டு, அந்த இளைஞர் கடையிலிருந்து ஓடினார். உடனே அவரைப் பிடிக்க கதிரவன் கடைவீதியில் விரட்டிச் சென்றார். எனினும், அந்த இளைஞர் தப்பியோடி விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், நாகை டவுன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x