Published : 24 Nov 2021 03:10 am

Updated : 24 Nov 2021 03:10 am

 

Published : 24 Nov 2021 03:10 AM
Last Updated : 24 Nov 2021 03:10 AM

வியர்க்குதே :

நாகர்கோவில்

நாகர்கோவில் மீனாட்சிபுரம் துணைமின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (25-ம் தேதி) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வடிவீஸ்வரம், கோட்டாறு, மீனாட்சிபுரம், கணேசபுரம், ஒழுகினசேரி, இடலாக்குடி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிகுளம் சந்திப்பு, சற்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, சவேரியார் கோயில் சந்திப்பு, கேபி ரோடு, ராமவர்மபுரம், எஸ்.எல்.பி. தெற்கு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

இதுபோல் நாகர்கோவில் துணை மின்நிலையப் பகுதிகளில் வரும் 26-ம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வடசேரி, ஆசாரிபள்ளம், தடிக்காரன்கோணம், வல்லன்குமாரவிளை துணை மின்நிலையங்கள் மற்றும் அதைசார்ந்த பகுதிகளிலும், நாகர்கோவில் பெருவிளை, சுங்காங்கடை, கிருஷ்ணன் கோயில், எம்.எஸ்.ரோடு, கல்லூரி சாலை, நீதிமன்ற சாலை, கே.பி.ரோடு, பால்பண்ணை, நேசமணிநகர், ஆசாரிபள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன்நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், ராஜாக்கமங்கலம், ஆலங்கோட்டை, கணபதிபுரம், சூரப்பள்ளம், பிள்ளையார்விளை, காரவிளை, வைராக்குடி, பருத்திவிளை, எறும்புக்காடு, பழவிளை, அனந்தநாடார் குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது என்று நாகர்கோவில் மின்விநியோக செயற்பொறியாளர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x