மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு - ரூ.8 லட்சம் மதிப்பில் நவீன செயற்கை அவயங்கள் : மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நவீன  செயற்கை அவயங்கள் பயன்படுத்துவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நவீன செயற்கை அவயங்கள் பயன்படுத்துவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்துடன் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் இணைக்கப்பட்டதன் 3-ம் ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், காப்பீட்டு திட்டத்தில் பயனடைந்த 5 பேருக்கு பரிசுப் பொருட்கள், 30 பேருக்கு புதிய காப்பீட்டு அட்டைகள், காப்பீட்டு துறையில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியுடன் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல மைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.8 இலட்சம் மதிப்பிலான நவீன செயற்கை அவயங்கள் வழங்கப் பட்டன.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், செயற்கை அவயங்களை அவர்கள் பயன்படுத்துவதையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் கண்ணகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in