Published : 23 Nov 2021 03:09 AM
Last Updated : 23 Nov 2021 03:09 AM

நாகை குறைதீர் கூட்டத்தில் 203 மனுக்கள் :

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், புதிய ரேஷன் கார்டு, கல்வி உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 203 மனுக்கள் பெறப்பட்டன.

நாகை வட்டம் மஞ்சக்கொல்லை கிராமம் குமரன் வடக்கு வீதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சபரிநாதனின் மருத்துவ செலவுக்காக ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.12 ஆயிரத்துக்கான காசோலை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பராமரிப்பு உதவித் தொகையாக தலா ரூ.1,500 வீதம் 5 பேருக்கு ரூ.7500-க்கான காசோலை, வேளாங்கண்ணியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜீவா அளித்த மனுவை ஆய்வு செய்து, உடனடி தீர்வாக மனுதாரருக்கு ரூ.6,850 மதிப்புள்ள மூன்று சக்கர நாற்காலி ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார்.

உலக சிக்கன நாள் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, சிறுசேமிப்பு குறித்து இணையதளம் மூலம் நடைபெற்ற கவிதை, பேச்சு, கட்டுரை, விழிப்புணர்வு சொற்றொடர், விநாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x