பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் :

திருநெல்வேலியில் பாஜக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.படம்:மு.லெட்சுமிஅருண்
திருநெல்வேலியில் பாஜக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.படம்:மு.லெட்சுமிஅருண்
Updated on
1 min read

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வாட் வரியை குறைக்க மறுப்பதாக திமுக அரசை கண்டித்து, திருநெல்வேலியில் பாஜக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கான விலை குறைப்பு செய்யப்பட்டதுபோல், தமிழகத்திலும் விலை குறைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையமுன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு கட்சியின் இளைஞரணி மாவட்ட தலைவர் ஆர். கணபதி, மகளிரணி தலைவர் எஸ். செல்வகனி ஆகியோர் தலைமை வகித்தனர். தச்சநல்லூர் மண்டல தலைவர் கே.எஸ். முருகப்பா முன்னிலை வகித்தார். கட்சியின் மாவட்ட தலைவர் ஏ. மகாராஜன் சிறப்புரை ஆற்றினார். துணை தலைவர் டி.வி. சுரேஷ், முருகதாஸ், மாவட்ட செயலாளர் ஏ. முத்துபலவேசம், பார்வையாளர் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in