

நீலகிரி மாவட்டத்தில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பைக்காரா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், மின் உற்பத்திக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘‘பைக்காராநீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா பயணிகள் நுழையாமல் இருக்க பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயில் பகுதியில் சிறுவர்களுக்கான விளையாட்டுஉபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு இருக்கை வசதிகளும்,கழிப்பிட வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. பைக்காரா அணை அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது,’’ என்றனர்.