

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 5,610 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல்மிஸ்ரா தெரிவித்தார்.
கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட கடலூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்று சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல்மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் ஆகியோர் கடலூர் சட்டமன்றஉறுப்பினர் கோ.ஐயப்பன் முன்னி லையில் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மருதாடு ஊராட்சி, வெள்ளப்பாக்கம், இரண்டாயிரவிளாகம் மற்றும் அழகியநத்தம் பகுதிகளில் வெள்ளப்பெருக் கினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேவனாம்பட்டினம் பகுதியில் கெடிலம் ஆறு கடலில் இணை யும் முகத்துவாரத்தினை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.பின்னர் செல்லங்குப்பம் சுனாமிநகரில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வை யிட்டு அங்குள்ள மக்களிடம் குறை களை கேட்டறிந்தனர்.
பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல்மிஸ்ரா செய்தி யாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது:
தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். அங்குள்ள மக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளார்கள். அவர்க ளுடைய கோரிக்கையை பரிசீலித்து உடனடியாக நிறைவேற்ற நடவ டிக்கை மேற்கொள்ளப்படும்.
கடலூர் மாவட்டத்தில் சுமார் 2,683 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 745 கால்நடைகள் இறந்துள்ளன. சுமார் 5,610 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு உரியநிவாரணம் வழங்க அரசுக்கு பரிந் துரை செய்யப்படும்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு வட்டாட்சியர் நிலையில் அலுவலர்களை நிய மித்து கணக்கெடுப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதி களில் சுகாதாரமான குடிநீர் கிடைக்கவும், தூய்மை பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. கால்நடைகளுக்கான நோய் தடுப்பு முகாம் அமைத்து சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சி.சக்திகணேசன்,கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மாவட்டஆய்வுக்குழு அலுவலர் ஜெகதீஸ் வரன், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் உடனிருந்தனர்.